JOBlog

tamil poems
#Cinema Comments Fun
Okay Thanks


வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க தமிழ் ஆன்லைன் ஜாப் வெப்சைட்

இணைய உலகின் முதன்மையான தமிழ் ஆன்லைன் ஜாப் களமான படுகை.காம்-ந் நோக்கம், தமிழ் மூலமாகவும் இணையத்தில் சம்பாதிக்க முடியும் என்பதனை நிரூபிப்பதுதான். ஆம், ஆங்கில மொழியில் செய்கின்ற ஒன்றை தமிழ் மொழியில் செய்து சம்பாதிக்க முடியாதா என்ன? ஆகவே தமிழில் சம்பாதிக்க முடியும் என்பது ஆச்சர்யம் இல்லை. ஆனால், இணையத்தில் எத்தனையோ ஏமாற்றுகள் வலம் வந்துகொண்டிருக்கும் வேலையில், எப்படி பிறருக்கு இது நம்பும்படியான பணி என தெளிவாக்குவதே கடினமாக உள்ளது.

குறிப்பாக சொன்னால், இணையத்தில் சம்பாதிக்க முடியும் என நண்பர் பகீ என்பவர் ஒர் கட்டுரை எழுதியுள்ளார். அதனை பலரும் இங்கு படித்திருக்கலாம். பார்க்க > [url]http://oorodi.com/tutorials/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d.html[/url]

அதைப் போன்ற ஒர் பணி தான் படுகை.காம் -லும். அப்படி இருந்தும் நண்பர் ஒருவரிடம் இருந்து வந்த கேள்வி.

padugai.com பற்றிய மேலான பார்வையில் நோக்கியதில் உங்கள் நோக்கம் தெளிவாக இருந்தும் பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்று அறைகூவல் விடுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் நடமாட்டமும் குறைவாக இருப்பதேன் என்பதே என் மனதில் தோன்றிய கருத்து.

மேலும் இணையத்திற்கு வருபவர்கள் அனைவருமே பணம் சம்பாதிக்கத்தான் வருகிறார்கள் என்னும் எண்ணமும் தவறானது.

நான் இணையத்தில் கடந்த 12 ஆண்டுகாலமாக இணைந்து இருக்கிறேன். திஸ்கிகால வி புல்லட்டின் காலத்திலிருந்து இணையத்தில் உலவுகிறேன்.

நீங்கள் நம்புவீர்களா...? இது வரை இது போல ஆன்லைனில் சம்பாதிக்க என்று கட்டணமாக மட்டுமே 10 ஆயிரத்துக்கும் மேல் செலவளித்திருப்பேன். அப்போதெல்லாம் வெளிநாட்டு ஆஃபர்கள் தான். எல்லாம் டாலரில் புரள்வது தான்..

இருப்பினும் இது வரை ஒரு நிறுவனமும் உருப்படியாக பணம் சம்பாதிக்க வழிவகை செய்யவில்லை.

விளம்பரம் பாருங்கள் சம்பாதிக்கலாமென்று என்னிடம் 2500 ரூபாய் சம்பாதித்தது ஒரு கம்பெனி. ஆயினும் ஒரு விளம்பரம் படித்து கிரெடிட் பாயிண்டை ஏற்றும்முன் இடுப்பு ஒடிந்து போகும்.

ஆன்லைன் என்பதே ஒரு மாயை. மாயைக்குள் ஒரு மாயை என்பது தான் இது போன்ற சம்பாதிக்கும் தளங்கள்.

எது எப்படி இருப்பினும் உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்..
===================================

[B]என்னுடைய பதில்:[/B]
ஆமாம்  சார்,

இணையத்தில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துபவர்கள் 56% க்கும் மேல், அதில் பணம் என்ற குறிக்கோளாய் பயன்படுத்துபவர்கள் வெகு சிலரே. அதாவது 20 - 16 % மட்டுமே.

இணையம் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் தனக்கென ஒர் வருவாயை கொண்டவர்கள். அதிலும் முக்கியமாய் பிரச்சனை என்னவென்றால், விளம்பரம் என்ற ஒர் கான்செப்ட்டை இணைய வேலை தேடுபவர்கள் கருத்தில் கொள்வதில்லை.

மாதம் 30 000 சம்பாதிக்கலாம் என்றால், முதல் மாதமே எனக்கு 30,000 வேண்டும் என கேட்பவர்கள் தான் இருக்கிறார்கள். அதற்கு எத்தனை கடின உழைப்பை கொடுக்க வேண்டும் என கருதுவதே இல்லை.

நீங்கள் சொன்னது போன்று விளம்பரம் பார்க்க காசு என்னும் ஒர் எளிமையான பணியினைக் கொடுத்ததும் ஓடிப் போய்கின்றனர். அதுவும், மாதம் இவ்வளவும் முதலீடு செய்தால் இவ்வளவு விளம்பரம் கொடுப்போம் என்றதும், அந்த விளம்பரத்திற்கு அத்தனை வேலிவ்வா என சிந்திக்காமல் ஏமாறுபவர்களும் இருக்கிறார்கள்.

நான் உங்களைப் போன்று, விளம்பரம் பார்க்கும் தளத்தில் சேர்ந்திருந்தாலும், பணத்தை இழக்கவில்லை. சம்பாதித்தே வந்தேன். எப்படி என்றால், அவர்கள் எதிர்பார்க்கும் திறமையான , தனக்கு கீழ் டவுன்லைனை சேர்க்கும் திறன் என்னிடம் இருந்ததால் மூன்று தளங்களில் சம்பாதித்தேன், இலவச உறுப்பினராக சேர்ந்துதான். அப்படி இரண்டு முறை பணம் சம்பாதித்த பின்னரே என் படுகை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்வேன். அதுவரை விளம்பரம் மட்டுமே இருக்கும்.

இவ்வாறக 4 முறை வெற்றிகரமாக பணம் பெற்றாலும் அடுத்து முடக்கப்பட்டேன்... அதுமட்டும் அல்ல என் படுகை உறுப்பினர்கள் எவரும் பணத்தினை பெற முடியவில்லை.

இதுபோன்று கூகுள் அட்சன்ஸ், சிட்டிகா, அட்பிரைட், பே பார் அட்ஸ் என பல தளங்களில் நான் சம்பாதித்த பின்னர் பிறர்க்கு அறிமுகம் செய்தாலும் என்னை பின்பற்றும் படுகை உறுப்பினர்களால் சம்பாதிக்க முடியவில்லை.

அப்படியெனில் இதைவிட எளிமையான வகையில் சம்பாதிக்க வைக்க வேண்டும் என்ற தூண்டலே படுகை. padugai நேரடியாக  அவர்களது பணியினை கணக்கீட்டு பணம் வழங்குதல் என்னும் திட்டத்தை கொண்டு வந்தது.

நீங்கள் ஒர் தள உரிமையாளர். உங்களிடம் என் திட்டத்தை சொல்வதன் மூலம், இணைய உலகின் முதன்மையாக தொடங்கப்பட்ட தமிழ் ஆன்லைன் ஜாப் தளம் படுகை.காம் என்னும் பெயரைத் தவிர, உங்கள் வசதி வாய்ப்பினாலும் இருக்கும் இதுவரை களம் பெற்ற சிறந்த பதிவர்கள் மூலமாகவும் எங்களை விட சிறப்பாக செய்ய முடியும்.

ஆனாலும் மேலோட்டமாய் சொல்கிறேன், ஏனென்றால் என் திட்டம் அனைத்தும் படுகை உறுப்பினர்களுக்கும் வாசகர்களுக்கும் என திறந்தவெளியில் இருப்பது தானே!

படுகை.காம் மூலம் கண்டிப்பாக மாதம் 30,000 சம்பாதிக்க முடியும். அதற்கு நம் கடின உழைப்பை கொடுக்க தயாராக இருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால், நீங்களும் கவிதை எழுதுவீர்கள் .. வைரமுத்துவும் கவிதை எழுதுகிறார் .. அவர் கவிதையின் மூலம் மாதம் லட்சம் இலட்சமாய் சம்பாதிக்கிறார். நீங்கள் உங்களது கவிதை மூலம் அவ்வாறக சம்பாதிக்க முடியுமா?

முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். நம் கவிதைக்கும் ஒர் மதிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும். நம் ஒவ்வொரு பதிவுமே ஒர் பணி என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

சுருங்கச் சொன்னால், படுகையில் இடப்படும் ஒவ்வொரு பதிவையும் பணமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். அதற்கு ஒவ்வொரு பதிவும் சிறப்பாக அமைய வேண்டும்.

கவிதை என்றால் நல்ல கவிதையாக வாசகர் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.

கட்டுரை என்றாலும் நன்று என வாசகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.

திரைவிமர்சனம் கூட எழுதலாம்., நல்ல நகைச்சுவையாக எழுதலாம். நம் வாழ்வில் நடப்பதை சொல்லலாம். இன்றைய செய்திகளுக்கான நம் கருத்துக்களை பதிவிடலாம். இப்படி எது செய்தாலும் மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு செய்தால் போதும்.

அந்த ஒன்று போதும், அவர்களது பதிவை படுகை பணமாக மாற்ற.

வெறும் ஆயிரம் ரூபாய் கட்டி கோல்டு மெம்பர் ஆகி, அப்பணத்தை இலட்சமாகவும் கோடிகளாகவும் மாற்றுவது உங்கள் உழைப்பினால் மட்டுமே.

திறமை இருப்பவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் புரிவதில்லை. திறமை இல்லாதவர்கள் .. 30,000 என்ற விளம்பரத்தை மட்டும் பார்த்து பணத்தை கெட்டிவிட்டு.. உழைக்க மறுக்கிறார்கள், அதாவது சிறந்த சொந்த பதிவை கொடுப்பவர்கள் மாதம் 10 ஆயிரம் என்ன இலட்சம் கூட சம்பாதிக்கலாம்.

ஆகையால் திறமையானவர்கள் ஒன்றிணைந்தால் கண்டிப்பாக தமிழ் மூலமாக இணையத்தில் சம்பாதிக்கலாம் என்ற ஒர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.

www.padugai.com வருவதும் தமிழை இணையத்தில் மேலும் முதன்மைப்படுத்த விரும்புவதும் அவரவர் விருப்பம். நாம் அதில் தலையிட முடியாது.  உங்களுக்கு பிடித்திராவிட்டாலும்... நாளை அல்லது ஒர் வருடம் கழித்து பார்ப்பவர்களுக்க்கு இது காட்சி தரும் என்ற நம்பிக்கையில் தான் பதிவிடுகிறேன்.


படுகை.காம்-ல் உழைப்பினால் சம்பாதிக்க பல வழிமுறைகள் இருக்கின்றன. அதாவது, கூகுள் போன்று விளம்பரமோ ... இலேன்ஸ் போன்று ப்ராஜக்ட் மூலமாகவோ என பல வகையான பணியினை நாம் செயல்படுத்த முடியும். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் வேண்டும்.

இப்பதிவு ... கண்டிப்பாக இப்பதிவு, இணையத்தில் நேரத்தை செலவிடும் அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில், இணையப்பணிக்கு என நாம் எந்த்வொரு புதிய பணியையும் செய்யப்போவதில்லை. இதுவரை செய்துவந்த கவிதை கட்டுரை மற்றும் வலைப்பூ பதிவுகள்,  பேஸ்புக் நண்பர்களை கவர்தல் என்று கூட சம்பாதிக்கலாம். மேலும், தனக்கு தெரிந்த டிசைனிங்க், வெப் ஹோஸ்டிங்க் , டேட்டா என்றி, காப்பி பேஸ்ட் போன்ற பணிகள் மூலமாகவும் சம்பாதிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு படுகை.காம்

0 comments: